/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 11, 2025 10:49 PM

கோவை; பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியன் வங்கி ஊழியர் சங்கம் சார்பில், மண்டல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தோடு இணைக்கப்பட்ட, இந்தியன் வங்கி ஊழியர் சங்கம் சார்பில், இந்தியன் வங்கி நிர்வாகத்தை கண்டித்து, வரும் 25ம் தேதி அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்கு முன்னோடியாக, கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் சையது இப்ராஹிம், இந்தியன் வங்கி ஊழியர் சங்க உதவி தலைவர் ஜெயபிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.