sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்தம் சிரமம் அடைந்த வாடிக்கையாளர்கள்

/

 வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்தம் சிரமம் அடைந்த வாடிக்கையாளர்கள்

 வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்தம் சிரமம் அடைந்த வாடிக்கையாளர்கள்

 வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்தம் சிரமம் அடைந்த வாடிக்கையாளர்கள்


ADDED : ஜன 28, 2026 05:11 AM

Google News

ADDED : ஜன 28, 2026 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடந்தது.

வாரம் 5 நாட்கள் மட்டுமே வேலை என்பதை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, நேற்று மாவட்ட அனைத்து வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ரயில்வே ஸ்டேஷன் எதிரேயுள்ள பாங்க் ஆப் பரோடா மண்டல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அகில இந்திய வங்கி பணியாளர்கள் அமைப்பின் மாவட்ட செயலாளர் முருகேசன் கூறியதாவது:

ரிசர்வ் வங்கி ஊழியர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் எல்.ஐ.சி., ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை. வங்கி ஊழியர்களுக்கு மட்டும்தான் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை. இரண்டாவது மற்றும் நான்காவது சனி மட்டும்தான் விடுமுறை விடப்படுகிறது.

வாரம் ஐந்து நாள் வேலை வலியுறுத்தி, 2015ம் ஆண்டில் இருந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். 2023 ம் ஆண்டு இந்தியன் வங்கி அசோசியேஷன் சார்பில் இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒரு நாளைக்கு, 40 நிமிடங்கள் கூடுதலாக வேலை செய்ய வேண்டும் என, நிபந்தனை வைக்கப்பட்டது. அதை ஏற்றும், ஒப்பந்தத்தை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

மாவட்ட வங்கி ஊழியர் சங்க தலைவர் பாஷா தலைமை வகித்தார். பொது செயலாளர் சையது இப்ராஹிம், தேசிய வங்கிகளின் ஊழியர் சங்க நிர்வாகி செந்தில் உட்பட, பொதுத்துறை, தனியார் மற்றும் கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.

வேலை நிறுத்தத்தால் வாடிக்கையாளர்கள் சிரமம் அடைந்தனர்.






      Dinamalar
      Follow us