/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வங்கி ஊழியர்கள் பணி இடைநீக்கம்; டிச., 2ல் வங்கிகளில் வேலை நிறுத்தம்
/
வங்கி ஊழியர்கள் பணி இடைநீக்கம்; டிச., 2ல் வங்கிகளில் வேலை நிறுத்தம்
வங்கி ஊழியர்கள் பணி இடைநீக்கம்; டிச., 2ல் வங்கிகளில் வேலை நிறுத்தம்
வங்கி ஊழியர்கள் பணி இடைநீக்கம்; டிச., 2ல் வங்கிகளில் வேலை நிறுத்தம்
ADDED : நவ 21, 2024 06:16 AM

கோவை: ''தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகளின் பணி இடைநீக்கத்தை கைவிடவில்லை என்றால், வரும் டிச., 2ம் தேதி, தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளில் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும்,'' என, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் விக்னேஷ், தலைவர் பிரபாகரன் ஆகியோர், கடந்த தீபாவளிக்கு முன், வாட்ஸ்- ஆப் குழு துவங்கியதற்காக, வங்கி நிர்வாகம், இவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
இதை கண்டித்து, கோவை மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் சார்பில், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நேற்று, வங்கியின் தலைமையகமான துாத்துக்குடியில், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் அங்கமான, தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில், தர்ணா நடத்தப்பட்டது.
இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாசலம் கூறியதாவது:
வாட்ஸ்- ஆப் குழு, முற்றிலும் தனிப்பட்ட குழு என்று விளக்கி, நிர்வாகத்திற்கு சங்கத்தினரால் பதில் அளிக்கப்பட்ட அதே நாளில், சங்கத்தின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இவர்களின் பணி இடை நீக்கத்தை கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி, குறிப்பிட்ட வங்கியின் பொது மேலாளரை சந்தித்து கோரிக்கை விடப்பட்டது. அவர், உயர்மட்ட நிர்வாகிகளிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். நடவடிக்கை இல்லை என்றால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளிலும், வரும் டிச., 2ம் தேதி, வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.