/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூரிய சக்தி மின் திட்டத்தில் சேருவதற்கு வங்கி கடன்
/
சூரிய சக்தி மின் திட்டத்தில் சேருவதற்கு வங்கி கடன்
சூரிய சக்தி மின் திட்டத்தில் சேருவதற்கு வங்கி கடன்
சூரிய சக்தி மின் திட்டத்தில் சேருவதற்கு வங்கி கடன்
ADDED : ஆக 25, 2025 09:40 PM

கருமத்தம்பட்டி; பிரதம மந்திரி சூரிய சக்தி மின் திட்டத்தின் வாயிலாக வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் வழங்கும் திட்டத்தை கடந்தாண்டு பிப்., மாதம் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் வீடுகளில் சூரிய மின் தகடுகள் பொருத்துவதன் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை பயன்படுத்தி, மின் கட்டண செலவினை குறைக்க முடியும்.
இத்திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் விழிப்புணர்வு கூட்டம், காடுவெட்டிபாளையம் கே.கே.எம்., திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
மின்வாரிய அதிகாரிகள் சக்திவேல், சந்தரமவுலி ஆகியோர் பங்கேற்று பேசியதாவது:
இத்திட்டத்தில் சேர்ந்தால் ஒரு கிலோ வாட்டுக்கு, 30 ஆயிரம் ரூபாயும், 2 கிலோ வாட்டுக்கு, 60 ஆயிரம் ரூபாயும், 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் உள்ள சூரிய சக்தி மின் உறப்த்திக்கு, 78 ஆயிரம் ரூபாயும் மானியமாக மத்திய அரசு வழங்குகிறது.
இத்திட்டத்தில் சேர வங்கி கடனும் வழங்கப்படுகிறது. ஒரு கிலோ வாட் சூரிய தகடு பொருத்தினால், ஒரு நாளில், 4 முதல் ஐந்து யூனிட் வரை மின்சாரம் கிடைக்கும். அதனால், மின் கட்டணத்துக்கான செலவு குறையும். பணத்தையும் சேமிக்க முடியும்.
இவ்வாறு, அவர்கள் பேசினர்.