/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேங்க் ஆப் இந்தியா சிறப்பு அறிவிப்பு
/
பேங்க் ஆப் இந்தியா சிறப்பு அறிவிப்பு
ADDED : செப் 29, 2024 01:38 AM
கோவை: பேங்க் ஆப் இந்தியா பண்டிகை காலத்தை முன்னிட்டு, சலுகை வட்டி விகிதத்தில், சிறப்பு 400 நாள் நிலையான வைப்புத்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வங்கியின் கோவை மண்டல மேலாளர் சம்பத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
பேங்க் ஆப் இந்தியா, தனது வாடிக்கையாளர்களுக்கு பண்டிகைக் கால பரிசாக, சிறப்பு 400 நாள் கால அளவில், வைப்புத்தொகையை 3 கோடி ரூபாய்க்கும் குறைவான தொகையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
சூப்பர் மூத்த குடிமக்கள் பிரிவுக்கு, 8.10 சதவீத வட்டியும், மூத்த குடிமக்கள் பிரிவில், 7.95 சதவீதமும், மற்ற வாடிக்கையாளர்களுக்கு 7.45 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
சூப்பர் மூத்த குடிமக்கள் பிரிவில், 7.95 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.80 சதவீதமும், மற்ற வாடிக்கையாளர்களுக்கு 7.30 சதவீதமும் என்ற, சிறப்பு சலுகை வட்டி விகிதமும் அளிக்கப்படுகிறது.
400 நாட்கள் நிலையான வைப்புத்தொகை திட்டத்தில், இந்திய குடியுரிமை பெற்றவர்கள், என்.ஆர்.இ., என்.ஆர்.ஐ., வாடிக்கையாளர்கள் பயன்பெறலாம். டிஜிட்டல் சேனல்கள் வாயிலாகவும், டெபாசிட் செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.