ADDED : ஜூன் 25, 2026 01:56 AM

அ நிறம் | அளவு
மருதமலை: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்தது.
இதில் நிரந்தர உண்டியலில், ரூ.1.05 கோடி பக்தர்கள் காணிக்கையாக இருந்தது. அதோடு, 105 கிராம் தங்கம், 5 கிலோ 502 கிராம் வெள்ளி, 25 கிலோ 700 கிராம் பித்தளை இருந்தது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் தக்கார் ஜெயகுமார், துணை கமிஷனர் விமலா, உதவி கமிஷனர் உஷா நந்தினி ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியை பார்வையிட்டனர். உண்டியல் எண்ணும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டனர்.
