ADDED : ஜூன் 25, 2026 01:53 AM

அ நிறம் | அளவு
உடையாம்பாளையம்: மாநகராட்சி, வா.12 உடையாம்பாளையம் பகுதியில் ராஜவாய்க்கால் உள்ளது. அதில் மழைநீர் தேங்காமல் தண்ணீர் எளிதாக செல்வதற்கு தேவையான வேலைகள் குறித்து கமிஷனர் ரவி தேஜா ஆய்வு செய்தார்.
மழை காலங்களில் ஆனைகட்டி பகுதியின் மழை நீர் பன்னிமடை வாய்க்கால் வழியாக, இந்த ராஜவாய்க்கால் தரைமட்ட குழாய் பாலத்தின் வழியாக சிங்காநல்லூர் கால்வாய் சென்று, பிறகு அங்கிருந்து நொய்யல் ஆற்றில் கலக்கிறது.
எனவே, மழை காலத்தில் ராஜவாய்க்கால் குழாய் பாலத்தில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் தேங்கும் வாய்ப்புள்ளது. இதை சரி செய்வதற்காக அப்பகுதியில் சிறுபாலம் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
பாலத்துக்கான உரிய திட்டமதிப்பீடு தயாரித்து வேலைகளை துவங்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
