/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் 'பேங்க்குவிஸ்ட்-2024'
/
ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் 'பேங்க்குவிஸ்ட்-2024'
ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் 'பேங்க்குவிஸ்ட்-2024'
ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் 'பேங்க்குவிஸ்ட்-2024'
ADDED : செப் 20, 2024 10:25 PM

கோவை : ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 'பேங்க்குவிஸ்ட்-2024' எனும் கலாசார நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கல்லுாரியின் வங்கி மற்றும் காப்பீட்டு துறை சார்பில் கல்லுாரிகளுக்கு இடையே நடந்த பல்வேறு போட்டிகளில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
அப்போது, தன்னம்பிக்கை பேச்சாளர் சந்தோஷ்குமார் பேசுகையில்,''நீ எதுவாக நினைக்கிறாயோ எதிர்காலத்தில் அதுவாக உருவெடுப்பாய் என்பதால், திட்டமிட்டு செயல்பட வேண்டும். ஆர்வமுடன் எது செய்தாலும், தடைகள் வந்தாலும் அது தகர்ந்துபோய்விடும். குறைகளை நிறைகளாக மாற்றினால் வெற்றி எளிதாகும்,'' என்றார்.
மெஹந்தி, சமையல், ஓவியம், புகைப்படம், பிரைடல் மேக்ஓவர், வினாடி-வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. துறை தலைவர் பிரபு வெங்கடேஷ், மாணவர்கள் சேர்மன் சியாம் மாதவன் உட்பட பலர் பங்கேற்றனர்.