ADDED : செப் 27, 2026 05:51 PM
அன்னுார், செப். 28–-
அன்னுாரில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, அனைத்து பொதுத்துறை வங்கிகளும், சில தனியார் வங்கிகளும் இயங்கின.
வாரத்தில் ஐந்து நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பென்ஷன் திட்டத்தை மறுசீரமைக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் வங்கி ஊழியர்களை நியமிக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐக்கிய வங்கிகள் சங்கம், வருகிற 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள், அகில இந்திய அளவில் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதனால் பொதுமக்கள், தொழில் முனைவோர் பாதிக்கப்படாமல் இருக்க ஞாயிற்றுக்கிழமை செயல்படும்படி வங்கிகளுக்கு, நிதி அமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் அறிவுறுத்தின.
அன்னுார் தாலுகாவில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கி கிளைகளும் செயல்பட்டன. வாடிக்கையாளர்கள் கூட்டம் வழக்கத்தை விட சற்று குறைவாக இருந்தது.
எனினும் ஞாயிறன்று செயல்பட்டதால் வந்த வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
எச்.டி.எப்.சி., கரூர் வைஸ்யா பாங்க் உள்ளிட்ட வங்கிகளும் நேற்று செயல்பட்டன.
