தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மலை ஏறும்போது மூச்சுத்திணறல் சென்னை பக்தர் உயிரிழந்தார்

மலை ஏறும்போது மூச்சுத்திணறல் சென்னை பக்தர் உயிரிழந்தார்

மலை ஏறும்போது மூச்சுத்திணறல் சென்னை பக்தர் உயிரிழந்தார்


ADDED : செப் 27, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 05:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம், செப். 28-–

கோவை அருகே மேல்முடி ரங்கநாதர் கோயிலுக்கு சென்ற சென்னை பக்தர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

சென்னை வில்லிவாக்கத்தில் வசித்தவர் வினோத்,48. இவர், சென்னை மீஞ்சூர் பகுதியில் உள்ள அசோக் லைலேண்ட் நிறுவனத்தில் டெக்னிக்கல் டிபார்ட்மெண்டில் பணிபுரிந்து வந்தார். புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, கோவை அருகே உள்ள மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக, தன்னுடன் பணியாற்றும், 6 நண்பர்களுடன் சென்னையிலிருந்து புறப்பட்டு கோவை வந்தார்.

மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு செல்ல மலை ஏறி உள்ளார். பாதி தூரத்தில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து மலை ஏற முடியாத நிலை ஏற்பட்டதால், வினோத், கீழே காரில் காத்திருப்பதாக நண்பர்களிடம் தெரிவித்து விட்டு வந்துள்ளார். மலையடிவாரத்திற்கு வந்த அவர், திடீரென மயங்கி விழுந்தார். அடிவாரத்தில் அருகே இருந்தவர்கள், 108 ஆம்புலன்சை வரவழைத்து பரிசோதனை செய்த போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து தடாகம் போலீஸ் எஸ்.எஸ்.ஐ., ஸ்ரீதர் விசாரணை நடத்தி வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us