/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சைபர் ஹேக்கத்தானில் பண்ணாரி அம்மன் 'டாப்'
/
சைபர் ஹேக்கத்தானில் பண்ணாரி அம்மன் 'டாப்'
ADDED : ஏப் 16, 2025 10:20 PM

கோவை; துாத்துக்குடி மாவட்ட காவல்துறை, வி.ஒ.சி., பொறியியல் கல்லுரியுடன் இணைந்து தேசிய அளவிலான சைபர் ஹேக்கத்தானை, அண்ணா பல்கலை, துாத்துக்குடி வளாகத்தில் நடத்தியது.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் முன்னணி கல்லுாரிகளிலிருந்து, 470 சமர்ப்பிப்புகள் பெறப்பட்டன. இதில், 19 அணிகள் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன.
இறுதிப் போட்டியில் இடம் பெற்ற, பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லுாரியை சேர்ந்த மாணவர்கள் ரோஹித், ஸ்ரீநிதி ஆகியோர், 'ஒரு தடையற்ற நகர ஓட்டத்திற்கான ஸ்மார்ட் போக்குவரத்து மேலாண்மை' என்ற திட்டத்துடன் பங்கேற்றனர். இது, ஸ்மார்ட் மேப்பிங் மூலம், போக்குவரத்து நெரிசல் மற்றும் அச்சுறுத்தல் பகுதிகளை அடையாளம் கண்டது.
இவர்களின் புதுமையான தீர்வு, இறுதி போட்டியில் முதல் பரிசை வென்றதோடு, ரூ. 70,000 ரொக்கப் பரிசையும் பெற்றனர்.