UPDATED : நவ 23, 2026 06:30 PM
ADDED : நவ 23, 2026 06:30 PM
பெ.நா.பாளையம்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தடை செய்யப்பட்ட, 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விதிமீறலில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களிடமிருந்து, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மளிகை கடைகள், உணவகங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பொருள்கள் பயன்பாட்டில் உள்ளனவா குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் கடைகளில் விற்பனைக்கும், பயன்பாட்டுக்கும் வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 100 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விதிமீறலில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், அரசின் பிளாஸ்டிக் தடுப்பு விதிமுறைகளை, அனைத்து வணிக நிறுவனங்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
