/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ.பி. தினம் ; தலைவர்களின் சிலைக்கு மலர் துாவி மரியாதை
/
பி.ஏ.பி. தினம் ; தலைவர்களின் சிலைக்கு மலர் துாவி மரியாதை
பி.ஏ.பி. தினம் ; தலைவர்களின் சிலைக்கு மலர் துாவி மரியாதை
பி.ஏ.பி. தினம் ; தலைவர்களின் சிலைக்கு மலர் துாவி மரியாதை
ADDED : அக் 07, 2025 09:07 PM

பொள்ளாச்சி; கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 4 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு, பயன் அளிக்கும் திட்டமாக பி.ஏ.பி., திட்டம் உள்ளது. தமிழக - கேரள இருமாநில ஒப்பந்தத்தில் செயல்படும் இத்திட்டம், ஆசியாவிலேயே சிறந்த நீர்ப்பாசன திட்டமாக உள்ளது.
திட்டப்பணிகள் நிறைவுற்று கடந்த, 1961ம் ஆண்டு அக். 7ம் தேதி பாசனம் துவங்கப்பட்டது. இந்த நாளை, பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்ட (பி.ஏ.பி.) தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
நேற்று, கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் பி.ஏ.பி. தினம் கொண்டாடப்பட்டது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், எம்.பி. ஈஸ்வரசாமி, கோவை கலெக்டர் பவன்குமார் ஆகியோர், முன்னாள் முதல்வர் காமராஜர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி, மகாலிங்கம், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்ரமணியம் ஆகியோரது திருவுருவச்சிலைக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம், ஆழியாறு நீர் தேக்க திட்டக்குழு தலைவர் செந்தில், நகராட்சி தலைவர் சியாமளா, தி.மு.க. மாவட்ட செயலாளர் முருகேசன் மற்றும் திட்டக்குழு உறுப்பினர்கள், விவசாயிகள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:
பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில், 4.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திருவுருவச்சிலைகளுடன் இரண்டு அடுக்குகள் கொண்ட புதிய அரங்குகள் கட்டப்பட்டன.
அதே போன்று, திட்டத்தில் பணியாற்றி உயிர் நீத்த பணியாளர்களுக்கு ஆழியாறு அணையில் நினைவரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பெரிய பாசன திட்டமான, பி.ஏ.பி. திட்டம் நடைமுறைக்கு வந்த இந்த நாளை முன்னிட்டு, சிறப்பு செய்ய வேண்டும், திட்டத்துக்காக பாடுபட்டவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக பி.ஏ.பி. தினம் கொண்டாடப்படுகிறது.
இவ்வாறு, அமைச்சர் கூறினார்.