/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை எங்கும் பள்ளம்: பரிதவிக்கும் ஓட்டுநர்கள்
/
சாலை எங்கும் பள்ளம்: பரிதவிக்கும் ஓட்டுநர்கள்
ADDED : அக் 07, 2025 10:40 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகராட்சியில், மொத்தம், 147.78 கி.மீ., துாரத்திற்கு சாலைகள் உள்ளன. நகராட்சி எல்லைக்குள், 11.50 கி.மீ., நீளமுள்ள சாலைகள் நெடுஞ்சாலைத் துறையினராலும், 5 கி.மீ., நீளமுள்ள சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள் வாயிலாகவும் பராமரிக்கப்படுகிறது.
ஆனால், கடந்த மூன்று மாதங்களாக நகராட்சியால் பராமரிக்கப்படும் சாலைகள் சிதிலமடைந்து, குண்டும் குழியுமாக மாறி விட்டன. புறநகர் வழித்தடத்தில் இருந்து நகரை கடந்து செல்ல எந்த வீதியில் சென்றாலும் பெரிய பள்ளங்களை கடந்து செல்ல வேண்டியுள்ளது.
தெப்பக்குளம் வீதி, பத்ரகாளியம்மன் கோவில் வீதி, ராஜாமில் ரோடு, நியூஸ்கீம் ரோடு என, அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளதால், அவ்வழியே இயக்கப்படும் வாகனங்கள் பழுதாகின்றன.
மக்கள் கூறுகையில், 'பெரிய பள்ளங்களில் வா கனங்கள் இறங்கி ஏறுவதால், சஸ்பென்சன் பழுதாகி விடுகிறது. குண்டும், குழியுமாக உள்ள ரோடுகளில் முதியவர்கள், பெண்கள் வாகனங்களை இயக்க சிரமப்படுகின்றனர்.
சாலையை புதுப்பிக்காவிட்டாலும், 'பேட்ச் ஒர்க்' பணியாவது மேற்கொள்ள வேண்டும்,' என்ற னர்.