/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் தேங்கிய மழை நீர்; பொது மக்கள் பாதிப்பு
/
ரோட்டில் தேங்கிய மழை நீர்; பொது மக்கள் பாதிப்பு
ADDED : அக் 07, 2025 10:41 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு - காட்டம்பட்டி செல்லும் ரோட்டில், வடசித்துார் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது.
கிணத்துக்கடவிலிருந்து காட்டம்பட்டி செல்லும் வழியில், தினமும் ஏராளமானோர் வாகனங்களில் செல்கின்றனர். இதில், வடசித்தூர் பகுதியில் ரவுண்டானா அருகே, ரோட்டில் அதிக அளவு மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் மக்கள் சிரமப்படுகின்றனர்.
இரவு நேர பயணத்தின் போது, இந்த ரோட்டில் வரும் பைக் ஓட்டுநர்கள் நிலை தடுமாறி கீழே விழ வாய்ப்புள்ளது. எனவே, நெடுஞ்சாலை துறை சார்பில், இந்த ரோட்டில் மழை நீர் தேங்காத வகையில், வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் அல்லது ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அப்பகுதியில் வடிகால் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.