/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வக்கீல் சங்க தேர்தல் முடிவுகள் அறிவிப்பு
/
வக்கீல் சங்க தேர்தல் முடிவுகள் அறிவிப்பு
ADDED : மார் 29, 2025 11:34 PM
கோவை: கோவை வக்கீல் சங்கத்திற்கு, 2025-26ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. நேற்று ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.பாலகிருஷ்ணன்,1,091 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட, கே.எம்.தண்டபாணி,822 ஓட்டும், கே.பாலதண்டபாணி,256 ஓட்டும், எஸ்.ரவீந்திரன்,109, ஓட்டும் பெற்றனர்.
துணைத்தலைவருக்கு போட்டியிட்ட ஆர்.திருஞானசம்பந்தம், 1,254 ஓட்டு வாங்கி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட எஸ். நந்தகுமார்,985 ஓட்டுகள் பெற்றார்.
செயலாளருக்கு போட்டியிட்ட கே. சுதீஷ்,1,733 ஓட்டு வாங்கி வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பி.பன்னீர் செல்வம்,507 ஓட்டு பெற்றார். பொருளாளருக்கு போட்டியிட்ட டி.ரவிச்சந்திரன்,1,335, ஓட்டு பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட, பி.ஜி.விஜய்,891, ஓட்டு பெற்றார்.
செயற்குழு உறுப்பினருக்கு போட்டியிட்டவர்களில் தர்மலிங்கம், ஈஸ்வரமூர்த்தி, சங்கர் ஆனந்தம்,சந்தோஷ், விஷ்ணு ஆகியோர் வெற்றி பெற்றனர்.