ADDED : மார் 09, 2024 09:08 PM
அ நிறம் | அளவு
கோவை:கோவை வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல், வரும் 27ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை வக்கீல் சங்க நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில், 2024 - 25ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய, தேர்தல் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும், 27ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் தேதி, வாபஸ், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு உள்ளிட்ட தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படவில்லை. தேர்தலில் போட்டியிட, வக்கீல்கள் பலர் மும்முரம் காட்டி வருகின்றனர்.
