/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வக்கீல சங்க நிறுவனர் தின நிகழ்ச்சி
/
வக்கீல சங்க நிறுவனர் தின நிகழ்ச்சி
ADDED : டிச 27, 2025 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை கிரிமினல் கோர்ட் வக்கீல் சங்கம், கடந்த 1960 ம் ஆண்டுகளில் துவங்கப்பட்டது.
பிரபல குற்றவியல் வக்கீல் சி.பி.கந்தசாமி, இச்சங்கத்தை நிறுவினார். தொழிற்சங்கத்திற்கு ஆஜராகி வாதாடி புகழ்பெற்ற கந்தசாமி 1968, டிச. 26 ல் மறைந்தார். அந்த நாள் நிறுவனர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் சங்க தலைவர் மருதுபாண்டியன் தலைமை தாங்கினார்.
கோவை பார் அசோசியேசன் தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் சுதீஷ், கிரிமினல் கோர்ட் வக்கீல்சங்க துணை தலைவர் சூர்யகுமார், செயலாளர் சந்திரமவுலி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

