/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மைதானம் மாரியம்மன் கோவில் பாரடையான் சாமி அழைப்பு
/
மைதானம் மாரியம்மன் கோவில் பாரடையான் சாமி அழைப்பு
ADDED : மார் 19, 2024 10:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் மிகவும் பழமை வாய்ந்த மைதானம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த ஆண்டு குண்டம் விழா கடந்த 12ம் தேதி பூச்சாற்றுடன் துவங்கியது.
வரும் 22ம் தேதி திருவிளக்கு பூஜையும், 26ம் தேதி குண்டம் இறங்குதலும், 27ம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. விழாவின் ஒருபகுதியாக நேற்று சிறுமுகை சாலையில் உள்ள மைக்கன் மாரியம்மன் கோவிலில் இருந்து பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோவிலுக்கு பாரடையான் சாமி அழைப்பு நடந்தது.
சாமி அழைப்பின் போது தாரை, தப்பட்டை முழங்க பூசாரிகள் சாமியை அழைத்து சென்றனர். சாமியை வழிநெடுக பக்தர்கள் வரவேற்று தரிசனம் செய்தனர்.

