/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லாறு இ---பாஸ் சோதனை சாவடியில் அடிப்படை வசதிகள் தினமலர் செய்தி எதிரொலி

ADDED : நவ 18, 2025 03:27 AM

மேட்டுப்பாளையம்: தினமலர் செய்தி எதிரொலியாக, மேட்டுப்பாளையம் கல்லாறு இ---பாஸ் சோதனை சாவடியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லாறு தூரிப்பாலம் அருகேயும், கோத்தகிரி சாலையில் குஞ்சபனை அருகே இ--பாஸ் சோதனை சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட வாகனங்கள், அரசு பஸ்கள், சரக்கு வாகனங்கள், லாரிகள் போன்றவற்றிக்கு இ--பாஸ் கிடையாது. மற்ற வாகனங்களுக்கு இ--பாஸ் இல்லாமல் அனுமதிக்கப்படுவது இல்லை. சோதனை சாவடி ஊழியர்களே இ--பாஸ் எடுத்து தருகின்றனர்.மேலும் சோதனை சாவடிகளில் குடிநீர் வசதி, கழிவறை வசதிகள் இல்லை.
இதுதொடர்பான செய்தி தினமலர் நாளிதழில் படத்துடன் வெளி வந்தது. இதையடுத்து, தற்போது இ--பாஸ் சோதனை சாவடியில் நீலகிரி மாவட்டம் வருவாய் துறை சார்பில், ஆண், பெண் என தனி தனியாக உபயோகப்படுத்தும் விதமாக கழிவறை கட்டடம் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. அதே போல் குடிநீர் வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. சேதமடைந்த சாலையும் சீரமைக்கப்பட்டுள்ளது. தினமலர் செய்தியின் எதிரொலியாக அடிப்படை வசதிகள் கல்லாறு இ--பாஸ் சோதனை சாவடிக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.