sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இருக்கு! முறையான பராமரிப்பு தான் இல்லை

/

 அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இருக்கு! முறையான பராமரிப்பு தான் இல்லை

 அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இருக்கு! முறையான பராமரிப்பு தான் இல்லை

 அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இருக்கு! முறையான பராமரிப்பு தான் இல்லை


ADDED : பிப் 02, 2026 05:01 AM

Google News

ADDED : பிப் 02, 2026 05:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, கள்ளிப்பட்டியில் ரோடு, கழிப்பிடம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இருந்தும், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளிப்பட்டி செல்லும் ரோடு சேதமடைந்துள்ளதால், அப்பகுதி மக்கள் ரோட்டில் பயணிக்க சிரமப்படுகின்றனர். மேலும், இரவு நேரத்தில் குண்டும் குழியுமாக இருக்கும் ரோட்டில் பைக்கில் செல்லும் போது, பலர் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர்.

இதே போன்று, கள்ளிப்பட்டியில் இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார வளாகம் நீண்ட நாட்களாக பயன்படுத்தாததால் சுற்றுப்புறம் மற்றும் உள் பகுதிகளில் செடிகள் மற்றும் மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது.

மேலும், இங்கு பூச்சிகள் மற்றும் கொசுத்தொல்லை இருப்பதால், குழந்தைகளை மாலை நேரத்தில் வெளியில் அனுப்ப மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இந்த சுகாதார வளாகத்தின் அருகில் ரோட்டின் ஓரத்தில் மலை போல் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

இது மட்டுமின்றி, குப்பையை சிலர் கழிவு நீர் கால்வாயில் கொட்டி செல்கின்றனர். இதனால் கழிவு நீர் தேக்கம் அடைந்தது உள்ளது. மழை காலங்களில் குழந்தைகளுக்கு காய்ச்சல் உள்ளிட்ட வியாதிகள் எளிதில் பரவும் வாய்ப்புள்ளது.

பொதுமக்கள் கூறியதாவது: கள்ளிப்பட்டி பகுதியில் ரோடு, கழிப்பிடம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இருந்தும், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும், இங்கு திறந்தவெளியில் குப்பை கொட்டுவது அதிகரித்து வருகிறது.

எனவே, இப்பகுதி மக்கள் நலன் கருதி ரோடு, கழிப்பிடத்தை ஊராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'கள்ளிப்பட்டியில் ரோடு மற்றும் கழிப்பிடம் சீரமைப்பு பணிகள் விரைவில் துவங்கப்படும். மேலும், பொது இடத்தில் குப்பை கொட்டுவதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us