இன்ஜினியரிங் கல்லுாரிகள் இடையே கூடைப்பந்து போட்டி
இன்ஜினியரிங் கல்லுாரிகள் இடையே கூடைப்பந்து போட்டி
ADDED : மார் 21, 2026 03:13 PM
கோவை: பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லுாரியின் உடற்கல்வி துறை சார்பில் இன்ஜி., கல்லுாரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி நேற்று முன்தினம் துவங்கியது; இன்று நிறைவடைகிறது.
ஆண்களுக்கான 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறை போட்டியில், 10க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன.
காருண்யா பல்கலை 70-58 என்ற புள்ளிகளில் அமிர்தா பல்கலையையும், கே.பி.ஆர்.ஐ.இ.டி., 61-53 புள்ளிகளில் பி.எஸ்.ஜி., டெக்., அலுமினி-ஏ அணியையும், எஸ்.என்.எஸ்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி 57-49 புள்ளிகளில் பி.எஸ்.ஜி., டெக்., அணியையும் வென்றன.
பி.எஸ்.ஜி., டெக்., அலுமினி-பி 70-53 புள்ளிகளில் ஜி.சி.டி., அணியையும், எஸ்.என்.எஸ்.சி.இ.டி., 63-37 ஜி.சி.டி., அணியையும், பி.எஸ்.ஜி., டெக்., அலுமினி-ஏ அணி 54-44 என்ற புள்ளிகளில் அமிர்தா பல்கலையையும், பி.எஸ்.ஜி., டெக்., 60-33 என்ற புள்ளிகளில் பி.எஸ்.ஜி., டெக்., அலுமினி-பி அணியையும் வென்றன. தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.
