/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை குற்றாலத்தில் குளிக்க மீண்டும் தடை
/
கோவை குற்றாலத்தில் குளிக்க மீண்டும் தடை
ADDED : ஆக 17, 2025 11:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர் ; மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில், சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில், கடந்த நான்கு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, நேற்று முதல் கோவை குற்றாலத்தில், சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.