/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளுக்கு விட்டாச்சு லீவு நீர்நிலைகளில் ஆனந்த குளியல்
/
பள்ளிகளுக்கு விட்டாச்சு லீவு நீர்நிலைகளில் ஆனந்த குளியல்
பள்ளிகளுக்கு விட்டாச்சு லீவு நீர்நிலைகளில் ஆனந்த குளியல்
பள்ளிகளுக்கு விட்டாச்சு லீவு நீர்நிலைகளில் ஆனந்த குளியல்
ADDED : ஏப் 22, 2025 11:39 PM

மேட்டுப்பாளையம், ; கோடை வெயிலை தணிக்க கிணறு, குளம், குட்டைகளில் சிறுவர்கள் ஆனந்தமாக குளித்து கும்மாளம் போட்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பகல் நேரங்களில் காலை 10 மணி அளவில் கூட வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில் சிறுவர்கள் தங்களது பகுதிகளில் உள்ள கிணறு, குளம், குட்டையில் குளித்து கும்மாளம் போட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், '' குழந்தைகளுக்கு தண்ணீர் என்றாலே ஆனந்தம் தான். அதுவும் வெயில் காலம் என்பதால் நீர் நிலைகளை தேடி செல்கின்றனர். அதில் ஆனந்தம் இருக்கும் அளவுக்கு ஆபத்தும் உள்ளது. வீட்டில் உள்ள பெற்றோர்கள் உஷாராக இருக்க வேண்டும், என்றனர்.
----