/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிரைவர் இல்லாததால் முடங்கிய பேட்டரி வாகனங்கள் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் புகார்

ADDED : பிப் 10, 2025 06:12 AM
அன்னுார் : 'வீடு, வீடாக, குப்பை சேகரிக்க, பேட்டரி வாகனங்களுக்கு போதுமான டிரைவர் இல்லை,' என பேரூராட்சி மன்ற கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
அன்னூர் பேரூராட்சி மன்ற கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் விஜயகுமார், செயல் அலுவலர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அன்னூர் பேரூராட்சியில் வார்டு எண் 4, 12, 13 ஆகியவற்றில் 35 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பேவர் பிளாக் தளம் அமைத்தல் மற்றும் தார் சாலை மேம்பாடு செய்தல். காளியாபுரம் மற்றும் சொக்கம்பாளையத்தில் 15 லட்சம் ரூபாயில் கழிப்பறைகள் கட்டுதல் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கவுன்சிலர்கள் பேசுகையில், ''சில வீடுகளில் பொதுமக்களே ஆர்வமாக மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரித்து கொடுத்தாலும் துாய்மை பணியாளர்கள் அவற்றை ஒரே டிரம்மில் சேகரிக்கின்றனர். தனித்தனியாக அவற்றைப் பெற வேண்டும்.
பேட்டரி வாகனங்களுக்கு, போதுமான டிரைவர்கள் இல்லாததால், ஐந்து வாகனங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன,' என்றனர். தலைவர் பரமேஸ்வரன் பதிலளிக்கையில், ''கழிவுநீர் வடிகால் பணிக்கு தூய்மை பணியாளர்கள் சிலர் அனுப்பப்படுகின்றனர். விரைவில் அனைத்து பேட்டரி வாகனங்களுக்கும் டிரைவர்கள் நியமிக்கப்படுவர்,'' என்றார்.