/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊராட்சிகளுக்கு பேட்டரி வாகனங்கள்
/
ஊராட்சிகளுக்கு பேட்டரி வாகனங்கள்
ADDED : ஆக 12, 2025 07:47 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 34 ஊராட்சிகள் உள்ளது. இதில், ஊராட்சி தூய்மை பணியாளர்கள் வீடுவீடாக சென்று குப்பை சேகரித்து வந்தனர். தற்போது இவர்களின் பணி சுமையை குறைக்கவும், வேலையை எளிமையாக்கவும், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ், 20 பேட்டரி வாகனங்கள், தலா, 2 லட்சத்து, 27 ஆயிரத்து, 147 ரூபாய் மதிப்பீட்டில் கடந்த மாதம் வாங்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று கோவில்பாளையத்தில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், 12 ஊராட்சிகளுக்கு இந்த பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டது.
ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'முகாமில், 12 ஊராட்சிகளுக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டது. அடுத்த கட்டமாக, 28 பேட்டரி வாகனங்கள், 12 ஊராட்சிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
இதற்கான கருத்துரு தயார் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து ஊராட்சிக்கும் வாகனங்கள் வழங்கப்படும்,' என்றனர்.