தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சின்னம்மை பரவும் உஷார் கவனமாக இருக்க வேண்டும்

 சின்னம்மை பரவும் உஷார் கவனமாக இருக்க வேண்டும்

 சின்னம்மை பரவும் உஷார் கவனமாக இருக்க வேண்டும்


ADDED : ஏப் 24, 2026 06:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 06:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: வெயிலால், பொன்னுக்கு வீங்கி, சின்னம்மை போன்ற உபாதைகள் பரவ வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

காரமடை வட்டார சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

குழந்தைகளுக்கு பொன்னுக்கு வீங்கி, சின்னம்மை, தட்டம்மை போன்ற உபாதைகள், வெயில் காரணமாக பரவ வாய்ப்புள்ளது. குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், இதனால் அதிகளவில் பாதிக்கப்படுவர். விளையாட்டு மைதானம், பூங்காக்களில் விளையாடும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில், அதிகளவில் பரவும் அபாயம் உள்ளது.

அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், உடனடியாக மருத்துவரை அணுகி, ஆலோசனை பெற வேண்டும். குழந்தைகளுக்கு வழக்கமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதா என பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தப்படுத்துதல், இருப்பிடத்தை சுத்தமாக வைத்திருத்தல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us