தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அடகு பொருளுக்கு பணம் தருவதில் கவனம் தேவை

 அடகு பொருளுக்கு பணம் தருவதில் கவனம் தேவை

 அடகு பொருளுக்கு பணம் தருவதில் கவனம் தேவை


ADDED : மார் 17, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: பொருட்கள் இல்லாமல் அடகு கடை நடத்துபவர்கள், பணம் கொடுக்கக் கூடாது. அடகு பொருளுக்கு பணம்தருவதில் கவனம் தேவை. ஏதேனும் தவறு நடப்பது தெரிந்தால், சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்தல் நடத்தும் அலுவலர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

மேட்டுப்பாளையம் தாலூகா அலுவலகத்தில், சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, திருமண மண்டபங்கள், திரையரங்குகள், அச்சகங்கள் மற்றும் அடகு கடைகளின் உரிமையாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் விஸ்வநாதன் தலைமை வகித்து பேசியதாவது:

திருமண மண்டபங்கள், திரையரங்குகளில் அரசியல் கட்சியினர், கூட்டம் நடத்தினால், அது சம்பந்தமாக முன்கூட்டியே, தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் தெரிவித்து, அனுமதி பெற வேண்டும். வெளியூர் ஆட்களை மண்டபத்தில் தங்க வைக்க அனுமதி இல்லை. அச்சகங்களில் அரசியல் கட்சியினர், விளம்பர நோட்டீஸ், போஸ்டர்கள் அடித்தால், அதில் அவசியம் அச்சகத்தின் பெயர் மற்றும் எண்ணிக்கை ஆகியவற்றை, அச்சிடப்பட வேண்டும். அச்சகத்தின் உரிமையாளர், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர், எவ்வளவு நோட்டீஸ், போஸ்டர்கள் அடித்த விபரங்களை, அதிகாரிகளுக்கு எழுத்து வாயிலாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

அடகு கடைகள் நடத்துவோர், ஒருவருக்கு பணம் கொடுக்கும் முன்பு, அவரிடம் உரிய நகைகள் பெற்றிருக்க வேண்டும். அதற்கான ரசீதும், அவரிடம் என்ன பொருளுக்கு, எவ்வளவு பணம் கொடுத்த விபரம், அதில் குறிப்பிடப்பட வேண்டும். ஏதேனும் தவறு நடப்பது தெரிந்தால், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு தேர்தல் நடத்தும் அலுவலர் பேசினார்.

கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா, தேர்தல் துணை தாசில்தார் பாலமுருகன் மற்றும் திருமண மண்டபங்கள், திரையரங்குகள், அச்சகங்கள், அடகு கடை உரிமையாளர்கள் என திரளானவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us