/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊதியம் வழங்குவதில் கூடலுரை கடைபிடியுங்க!
/
ஊதியம் வழங்குவதில் கூடலுரை கடைபிடியுங்க!
ADDED : மார் 18, 2025 10:17 PM
வால்பாறை, ;கூடலுாரை போன்று, வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும், என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் நகராட்சி தலைவர் மற்றும் கமிஷனரிடம் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:
வால்பாறை நகராட்சியில், கடந்த ஏழு ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில், 45 துாய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறோம். பல்வேறு சிரமத்திற்கு இடையே பணிபுரியும் பணியாளர்களுக்கு, தற்போது, மாத ஊதியமாக, 16 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. தற்போதைய விலைவாசியில் இந்த ஊதியம் போதுமானதாக இல்லை.
ஆனால், நீலகிரி மாவட்டம் கூடலுார் நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு தற்போது மாதம் ஊதியமாக, 22 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. எனவே, துாய்மை பணியாளர்களின் வறுமையை உணர்ந்து, கூடலுார் நகராட்சியில் வழங்குவது போன்று, வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.