/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கடைகளில் பொறுமை காக்கவும்! தொழில்நுட்ப மேம்பாடுக்கு ஒத்துழைக்கணும்
/
ரேஷன் கடைகளில் பொறுமை காக்கவும்! தொழில்நுட்ப மேம்பாடுக்கு ஒத்துழைக்கணும்
ரேஷன் கடைகளில் பொறுமை காக்கவும்! தொழில்நுட்ப மேம்பாடுக்கு ஒத்துழைக்கணும்
ரேஷன் கடைகளில் பொறுமை காக்கவும்! தொழில்நுட்ப மேம்பாடுக்கு ஒத்துழைக்கணும்
ADDED : ஜூன் 04, 2025 08:35 PM

வால்பாறை; வால்பாறையில், ரேஷன் கடைகளில் 'பாயின்ட் ஆப் சேல்' கருவியால்பொருட்களை வாங்க கால்கடுக்க பல மணி நேரம் காத்திருந்திருந்தனர்.
வால்பாறை தாலுகாவில், 46 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் மொத்தம், 16,534 கார்டுகள் உள்ளன. ரேஷன் கடைகள் வாயிலாக, மாதம் தோறும் அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு நடைமுறைக்கு வந்த பின், பொருட்கள் வாங்க கைரேகை பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், பொதுமக்களுக்கு கைரேகை பதிவு செய்து கடந்த சில மாதங்களாக பொருட்கள் பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில், வால்பாறை சிந்தாமணி ரேஷன் கடைகளில் டிஜிட்டல் தராசில், நவீன தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, பொருட்கள் எடையளவு செய்யப்படுகிறது. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க மக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
வால்பாறையில், 'பாயின்ட் ஆப் சேல்' கருவியின் செயல்பாடு குறித்து கூட்டுறவு சார் பதிவாளர் அருண்குமார், வட்ட வழங்கல் அலுவலர் சரவணன், சிந்தாமணி கிளை மேலாளர் அன்பழகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகையில், 'ஏற்கனவே கைவிரல் ரேகை, கருவிழிப்பதிவு போன்றவைகளால் மக்கள் நீண்ட நேரம் நின்று பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
தற்போது டிஜிட்டல் தராசு நடைமுறையால், ரேஷன் பொருட்கள் வழங்கும் போது, மேலும் காலதாமதமாகிறது.
அரசின் இந்த திட்டம் வரவேற்கக்கூடியது என்றாலும், பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் பொருட்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப வசதியை மேம்படுத்தி கொடுக்க வேண்டும்,' என்றனர்.
அதிகாரிகள் கூறியதாவது:
ரேஷன் கார்டுதாரர் கைவிரல் ரேகை பதிவு செய்த பின், கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஒவ்வொரு பொருள் அளவும் திரையில் தெரியும், தராசில் பொருட்களை வைத்து, துல்லியமாக அளக்கும் போது மட்டுமே சம்பந்தப்பட்ட பொருளை தேர்வு செய்து, பில் போட முடியும். புதிய தொழில்நுட்ப வசதியுடன் கூடிய தராசில், 12 கிலோ எடை பொருட்களை மட்டுமே வைக்க முடியும்.
அரசின் திட்டத்தை முதன் முறையாக நடைமுறைப்படுத்தும் போது, பொருட்களை வாங்க மக்கள் கட்டாயம் காத்திருக்க வேண்டும். அரசின் இந்த நடவடிக்கையால் ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க முடியும். மேலும், கார்டுதாரர்களுக்கு அளவு குறையாமல் சரியான எடையில் பொருட்களை வழங்க முடியும்.
இவ்வாறு, கூறினர்.