/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டாசு வெடிக்க பத்திரமா பார்த்து ஆடை வாங்குங்க
/
பட்டாசு வெடிக்க பத்திரமா பார்த்து ஆடை வாங்குங்க
ADDED : அக் 17, 2024 11:41 PM
புதிய டிரஸ், ஸ்வீட்ஸ், பட்டாசு என சந்தோசமாய் சிறகடிக்க குழந்தைகளுக்கு நிறைய காரணங்களை தீபாவளி தருகிறது.
அதேசமயம், நெருப்புடன் குழந்தைகள் நெருங்கி விளையாடும் பண்டிகை என்பதால் அவர்கள் அணியும் ஆடைகளை, கவனமாக பார்த்து வாங்க வேண்டும்.
தளர்வான ஆடைகளில் தீப்பற்றக்கூடும் என்பதால், குழந்தைகளுக்கு பிட்டான ஆடைகளை வாங்க வேண்டும். நீண்ட பாவாடை, துப்பட்டா, லெகாங்கா, தோத்தி, மற்றும் முழுக்கை ஆடைகளை தவிர்க்கலாம்.
இதேபோல், நைலான், சிந்தடிக், பாலிஸ்டர், சிபான் போன்ற எளிதில் தீப்பிடிக்கும் மெட்டீரியல் ஆடைகளையும் தவிர்ப்பது நல்லது.தீ விபத்து அபாயம் மட்டுமின்றி, குழந்தைகள் சவுகரியமாக, பண்டிகையை கொண்டாடுவது முக்கியம். அவர்கள், ஓடி, ஆடி விளையாட ஏதுவாக, லேசான, கம்பர்டபுளான ஆடைகளை வாங்க வேண்டும்.
பண்டிகைக்கு கிராண்டான ஆடையை வாங்கிவிட்டாலும், பட்டாசு வெடிக்கும் போது, பருத்தி போன்ற பாதுகாப்பான ஆடைகளை அணிந்து விடலாம். அதேபோல், பட்டாசு வெடிக்கும் போது மெட்டல், கண்ணாடி வளையல் போன்ற ஹெவி அணிகலன்களை அகற்றிட வேண்டும். அணிகலன்கள் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்பும், அசவுகரியமாகவும் இருக்கும்.
பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகளுக்கு காலை மூடியபடி இருக்கும் வகையில், ஷூக்கள், அதிக சத்தம் மற்றும் மாசுமிக்க புகையிலிருந்து பாதுகாக்க, காதுகளுக்கு 'இயர்பிளக்ஸ்' , முக கவசம் அணிந்துவிட வேண்டும். தீபாவளி பர்சேசில், இதையும் மறக்காம வாங்கிடுங்க!