ADDED : ஜூலை 20, 2025 10:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை; வால்பாறை நகரில் தங்கும் விடுதிகளுக்கு, பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். சமீபகாலமாக, நகரிலும், புறநகர் பகுதியிலும், இரவு நேரத்தில் சிறுத்தைகள் வலம் வந்து, குடியிருப்பு பகுதியில் உள்ள நாய், கோழி, பூனை போன்றவைகளை கவ்வி செல்கின்றன. சிறுத்தையை தொடர்ந்து வால்பாறை நகரில், தற்போது கரடிகளும் உலா வரத்துவங்கியுள்ளன.
மக்கள் மிகுந்த வால்பாறை போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் இரவு நேரத்தில் கரடி செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. சிறுத்தையை தொடர்ந்து, கரடியும் நகரில் உலா வருவதால், மக்களும், சுற்றுலா பயணியரும் அச்சத்தில் உள்ளனர்.