/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அழகுப்படுத்தினால் பத்தாது... பராமரிக்கவும் வேண்டும்! குளக்கரையில் கருகும் புல் மேடுகள்; கண்டு குமுறும் பொதுமக்கள்

ADDED : பிப் 24, 2024 12:23 AM

கோவை;'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட உக்கடம், முத்தண்ணன் குளக்கரைகளில் நடப்பட்ட மரங்களும், புல் மேடுகள் தண்ணீரின்றி கருகி வருகின்றன.
கோவை மாநகராட்சியில், மத்திய அரசின் ரூ.490 கோடி நிதியிலும், மாநில அரசின் நிதியான ரூ.500 கோடியும் என, ரூ.990 கோடியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதில், உக்கடம் பெரியகுளம் ரூ.62 கோடியிலும், குமாரசாமி குளம் எனப்படும் முத்தண்ணன் குளம், ரூ.31.65 கோடியிலும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, பெரியகுளத்தின் கிழக்கு கரையில், இலகுரக வாகனங்கள் செல்வதற்கு, பாதை அமைக்கப்பட்டது. குளக்கரையில் ரோட்டை ஒட்டிய பகுதியில், புல்வெளி வளர்க்கப்பட்டு, 2015ல் அழகுபடுத்தப்பட்டது.
இரு ஆண்டுகளுக்கு முன், மரக்கன்றுகளும் நடப்பட்ட நிலையில் சரியாக பராமரிக்காததால் மரங்கள் கருகுவதுடன், புதர்மண்டியும் கிடக்கிறது. முத்தண்ணன் குளத்தில் அலங்கார தாவரங்கள், மலர் மரங்கள் என பல்வேறு பணிகளும், துவக்கத்தில் ஈர்க்கும் வகையில் இருந்தன.
தற்போது, களைச்செடியான பார்த்தீனியம் பரவிக்கிடக்கிறது. சொக்கம்புதுாரை ஒட்டிய குளக்கரையில் பசுமையான புல் மேடுகள், 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அவை தற்போது தண்ணீரின்றி காய்ந்து வருவது, தினமும் அங்கு வந்து செல்வோருக்குவேதனையை தருகிறது.
குளக்கரைகளை அழகூட்ட, பல கோடி ரூபாய் செலவிட்டுள்ள மாநகராட்சி நிர்வாகம்,அவற்றை பராமரிப்பதிலும்கவனம் செலுத்த வேண்டும்.