ADDED : பிப் 28, 2024 12:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே புதுப்புதுார் கிராமத்தில் கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், பெண்களுக்கான அழகு கலை இலவச பயிற்சி, இன்று முதல் தொடர்ந்து, 30 நாட்கள் நடக்கிறது. பயிற்சியில் சேர ஆர்வம் உள்ள பெண்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
பயிற்சி பெறும் பெண்கள், 18 முதல், 45 வயதுக்குள் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். கோவை மாவட்ட கிராமப்புற மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு, 94890 43926என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

