/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேனீ வளர்ப்பு; இரு நாள் பயிற்சி முகாம் துவக்கம்
/
தேனீ வளர்ப்பு; இரு நாள் பயிற்சி முகாம் துவக்கம்
ADDED : அக் 17, 2024 10:18 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், தேனீ வளர்ப்பு குறித்த இரு நாட்கள் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில், மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு இரண்டு நாள் பயிற்சி, என்.ஜி.எம்., கல்லுாரியில் நேற்று துவங்கியது. வேளாண் இணை இயக்குனர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சித்தார்த்தன் வரவேற்றார்.
வேளாண் துணை இயக்குனர் மல்லிகா, கோவை மாவட்ட வேளாண் உற்பத்தி குழு உறுப்பினர், விவசாயம் மற்றும் கூட்டுறவுக்கான சர்வசேத கூட்டமைப்பு நிறுவன தலைவர் செந்தில்குமார், 'அட்மா' தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் பேசினர்.
கோவை வேளாண் பல்கலை பூச்சியியல் துறை பேராசிரியர் சாமிநாதன், தேனீ வளர்ப்பு முறைகள், வளர்ப்பு கால சூழ்நிலை, தேனீக்கு ஏற்படும் பூச்சி தாக்குதல், வைரஸ் நோய் தாக்குதல், தேனீக்களின் வகைகள் குறித்து விளக்கினார்.
ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத், தோட்டக்கலைத்துறை வாயிலாக செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விளக்கினார்.
ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் இணை பேராசிரியர் அருள்பிரகாஷ், தேன் உற்பத்தியின் முக்கியத்துவம், உற்பத்தி முறைகள் குறித்தும்; ஆனைமலை ஸ்ரீ கோபாலா தேன் பண்ணை விவேகானந்தன், தேன் உற்பத்தி மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி, சந்தைப்படுத்துதல் குறித்து பேசினார். வடக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
கருத்தரங்கில், தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் நந்தினி, சுரேஷ், மதுபாலா, வசுமதி மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.
கண்காட்சி
நிகழ்ச்சியில், தோட்டக்கலைத்துறை வாயிலாக கண்காட்சி அமைக்கப்பட்டது. தேன் உற்பத்திக்கான தேன் பெட்டி, தேன் பிரித்தெடுக்கும் இயந்திரம், பொள்ளாச்சி பகுதியில் பயிரிடப்படும் காய்கறிகள், பழப்பயிர்கள், கோகோ, ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி போன்றவை காட்சிப்படுத்தப்பட்டது.
மேலும், கோபாலா தேன் பண்ணை சார்பில், தேன் மெழுகு சிலைகள், தேன் உற்பத்திக்கு தேவைப்படும் உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. விநாயகா உற்பத்தி குழு வாயிலாக 'நீரா' பானம் காட்சிப்படுத்தப்பட்டது.