/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டடத்தின் ஆயுளை நிலைநாட்டும் செங்கல் தரம் குறித்து 'மணி ஒலி' எச்சரிக்கை
/
கட்டடத்தின் ஆயுளை நிலைநாட்டும் செங்கல் தரம் குறித்து 'மணி ஒலி' எச்சரிக்கை
கட்டடத்தின் ஆயுளை நிலைநாட்டும் செங்கல் தரம் குறித்து 'மணி ஒலி' எச்சரிக்கை
கட்டடத்தின் ஆயுளை நிலைநாட்டும் செங்கல் தரம் குறித்து 'மணி ஒலி' எச்சரிக்கை
ADDED : நவ 22, 2024 11:16 PM

கட்டடத்தின் வலிமையை நிலைநாட்ட தரமான கட்டுமான பொருட்களை பயன்படுத்துவது அவசியம். ஒரு கட்டடத்தின் முதுகெலும்பாக செங்கல் உள்ளது. எனவே, உறுதியான வீட்டை கட்டுவதற்கு உயர்தரமான செங்கற்களை பயன்படுத்த வேண்டும்.
அதுவும் நியாயமான விலையிலும், அது தயாரிக்கப்படும் இடத்துக்கு சென்று தரமானதாகவும் வாங்குவது தரத்தில் மட்டுமின்றி பொருளாதாரத்திலும் வலிமையை கூட்டும்.
செங்கலின் வடிவம் சரியாக இருப்பதோடு, முனைகள் உடைந்திருக்காமல் கூர்மையாக இருக்க வேண்டும்.
குறிப்பாக, செங்கல் ஒவ்வொன்றின் நிறம் சீராக ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அதை உடைத்தால் சிறு துண்டுகளாக சிதறக்கூடாது.
அதேபோல், கட்டுமானத்துக்கு ஐ.எஸ்., தரச்சான்று பெற்ற இரும்பு கம்பிகளை பயன்படுத்த வேண்டும் என்கிறார் பொறியாளர் மாரிமுத்துராஜ்.
அவர் நம்மிடம் கூறியதாவது:
இரு செங்கற்களை ஒன்றோடு ஒன்றோடு மோதி பார்த்தால் அதன் வலிமை தெரியவரும். தரமான செங்கல் எனில் ஒன்றுடன் ஒன்று இடிக்கும்போது, மணி ஒலி போன்று தெளிவாக கேட்கும். மேலும், ஒரு மீட்டர் உயரத்தில் இருந்து செங்கல்லை செங்குத்தாக போட வேண்டும். தரமான செங்கல் உடையாது. மேலும், முழுமையாக நனையும்படி தண்ணீர் தொட்டியில், 24 மணி நேரம் போட்டு வைத்து சோதனை செய்யலாம். அதாவது, 24 மணி நேரத்துக்கு பிறகு அதன் எடையை பார்க்கும்போது, உலர்ந்த நிலைக்கும், ஈரமான நிலைக்கும் அதன் எடையில், 15 சதவீதத்துக்கும் மேல் வித்தியாசம் இருந்தால் அது கட்டுமான பணிக்கு ஏற்றதல்ல.
உதாரணமாக, உலர்ந்த செங்கல் எடை, 2 கிலோ இருந்தால், 24 மணி நேரம் தண்ணீரில் ஊறிய பின்பு, அதன் எடை, 2.3 கிலோ அல்லது அதற்கு மேலும் இருந்தால் பயன்படுத்துவதற்கு தகுதியானது கிடையாது. இதுபோன்ற செங்கல்களை தவிர்ப்பது நல்லது.
அதேபோல், கான்கிரீட் சிறப்பான அழுத்தம் தாங்கும் வலிமை கொண்டது என்றாலும், வளைதல் மற்றும் இதர அழுத்தங்களை அது தானே தாங்கக்கூடியது அல்ல. இத்தகைய குறையை சரி செய்யவும், போதுமான வலிமையை அளிப்பதற்கும், இரும்பு கம்பிகள் மற்றும் 'பார்'கள் கான்கிரீட்டினுள் அமைக்கப்படுகின்றன.
இவை, 'ரெய்ன்போர்ஸ்டு சிமென்ட் கான்கிரீட்' அல்லது ஆர்.சி.சி., என்று அழைக்கப்படுகிறது. ஆர்.சி.சி., கட்டுமானத்தின் பயன்பாடுகளுக்கு எப்போதும் ஐ.எஸ்., சான்று பெற்ற இரும்பு 'பார்'கள் பயன்படுத்த வேண்டும். இதன் மேல் துருப்பிடிக்காமல் உள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்வது மிகவும் நல்லது.
இவ்வாறு, அவர் கூறினார்.

