ADDED : ஏப் 12, 2026 05:41 AM

செய்முறை: ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் துருவிய பீட்ரூட்டைச் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும் (அதிலுள்ள ஈரப்பதம் போகும் வரை). இதனுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். இப்போது மசித்த உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். மல்லித்தழை தூவி ஆறவிடவும்.
இந்த கலவையைச் சிறிய உருண்டைகளாகப் பிடித்து, தட்டையாக கட்லெட் வடிவில் தட்டிக் கொள்ளவும். ஒவ்வொரு கட்லெட்டையும் சோள மாவு கரைசலில் நனைத்து, பின் பிரெட் தூளில் போட்டு உருட்டி எடுக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி, தயார் செய்த கட்லெட்டுகளை வைத்து மிதமான தீயால் இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேகவைத்து எடுக்கவும். பீட்ரூட் கட்லெட்டை தக்காளி கெட்ச் அப் உடன் சேர்த்துச் சாப்பிட்டால் மிக அற்புதமாக இருக்கும்!
