/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'யூ டேர்ன்' போட்டு திருப்புவதற்குள் அப்பப்பா! தண்டுமாரியம்மன் கோவிலுக்கு எதிரே திணறும் பஸ், லாரி
/
'யூ டேர்ன்' போட்டு திருப்புவதற்குள் அப்பப்பா! தண்டுமாரியம்மன் கோவிலுக்கு எதிரே திணறும் பஸ், லாரி
'யூ டேர்ன்' போட்டு திருப்புவதற்குள் அப்பப்பா! தண்டுமாரியம்மன் கோவிலுக்கு எதிரே திணறும் பஸ், லாரி
'யூ டேர்ன்' போட்டு திருப்புவதற்குள் அப்பப்பா! தண்டுமாரியம்மன் கோவிலுக்கு எதிரே திணறும் பஸ், லாரி
ADDED : ஜன 25, 2024 06:32 AM

கோவை : கோவையில் பிரதான சாலைகளில், 'யூ டேர்ன்' வசதி செய்துள்ள இடங்களில், பஸ்கள் திரும்ப முடியாமல் திணறுகின்றன. அச்சமயத்தில், மற்ற வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். விபத்து ஏற்படும் முன், மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
கோவை அவிநாசி ரோடு மற்றும் திருச்சி ரோடு, ஆத்துப்பாலம் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க, போக்குவரத்து போலீசாரும், மாநில நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு குழுவினரும் கள ஆய்வு செய்து, 'யூ டேர்ன்' வசதி செய்துள்ளனர்.
இது, ஸ்கூட்டர், பைக், ஆட்டோ மற்றும் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு பயனுள்ளதாக இருக்கிறது.
ஆனால் பஸ்கள், லாரிகள், சரக்கு வாகனங்கள் திரும்ப முடியாமல், திணறுகின்றன. ரோட்டின் ஒருபுறத்தில் இருந்து இன்னொரு புறத்துக்கு செல்வதற்குள், இருபுறமும் வாகனங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
பஸ்கள், லாரிகள் திரும்ப போவது தெரியாமல், நேராக செல்லக்கூடிய வாகனங்கள் விபத்தில் சிக்கக்கூடிய அபாயம் இருக்கிறது.
அவிநாசி ரோட்டில் தண்டுமாரியம்மன் கோவில், லட்சுமி மில்ஸ் சந்திப்பு அருகில் இப்பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது.
தண்டுமாரியம்மன் கோவில் பகுதியில், பஸ் கள், லாரிகள் திரும்பும்போது, பழைய மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்களும், நஞ்சப்பா ரோட்டில் இருந்து வரும் வாகனங்களும் மிகவும் உஷாராக கடக்க வேண்டியிருக்கிறது.
கொஞ்சம் கவனம் சிதறினாலும், பஸ்கள் மற்றும் லாரிகளின் சக்கரங்களுக்குள் சிக்கி, விபத்தை சந்திக்க நேரிடும்.
இதேபோல், வ.உ.சி., மைதானம் பகுதியில் இருந்து ஹோப் காலேஜ் நோக்கிச் செல்வோரும், அவிநாசி ரோட்டில் இருந்து பாலசுந்தரம் ரோட்டுக்குச் செல்வோரும், அண்ணாதுரை சிலை சந்திப்பில் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து போலீசாரும், சாலை பாதுகாப்பு குழுவினரும் மீண்டும் கள ஆய்வு செய்து, வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் சிரமங்களை அறிந்து, தீர்வு காண வேண்டும்.