/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்னணு வழக்கு தாக்கல் நன்மைகள்!
/
மின்னணு வழக்கு தாக்கல் நன்மைகள்!
ADDED : நவ 26, 2025 07:11 AM
மி ன்னணு முறையில் வழக்கு தாக்கல் என்பது சுப்ரீம் கோர்ட்டால் துவங்கப்பட்ட புதிய மற்றும் எளிய முறையில், வழக்குகளை நிகழ்நிலை வாயிலாக தாக்கல் செய்யும் முறையாகும்.
சுப்ரீம் கோர்ட்டிலுள்ளஇ-கமிட்டியானது, மின்-தாக்கல் முறையை பயன்படுத்தி வழக்கு தாக்கல் செய்வதற்கான புதிய நடைமுறையினை வடிவமைத்துள்ளது.
இதன் வாயிலாக வழக்குகளையும், சட்ட ஆவணங்களையும் மின்னணு முறையில் வழக்கு தாக்கல் செய்ய முடிகிறது.
இந்த நடைமுறையைப் பின்பற்றி அனைத்து உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்கள் முன்பாக, நேரில் செல்லாமல் தங்களது இடத்திலிருந்தே, வழக்குகளைப் பதிவு செய்யலாம். இந்த மின்னணு வழக்கு தாக்கல் முறையானது, காகிதமில்லா தாக்கல்' செய்யும் முறையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது. இந்தியாவில் நீதிமன்றங்களில் வழக்குகளைத் தாக்கல் செய்ய, தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவதன் மூலம் நேரத்தையும் செலவையும் சேமிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரர்கள் தங்கள் அலுவலகம் அல்லது வீட்டிலிருந்தபடி எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் வழக்கு தாக்கல் செய்யலாம். இதனால் நீதிமன்றத்திற்கு செல்ல தேவையில்லை.
பயண நேரம் மற்றும் செலவு குறைகிறது. ஆவணங்களை அச்சிடுதல் மற்றும் கூரியர் செலவுகள் போன்ற காகித வேலைகள் கணிசமாக குறையும். வழக்கு தொடர்பான ஆவணங்களை சேமிப்பதற்கான இடத்தின் தேவை குறைக்கப்படுகிறது.
வழக்கு தாக்கல் செய்யும் செயல்முறை விரைவாகிறது. ஆவணங்களின் தானியங்கி ஆய்வு மற்றும் மதிப்பாய்வு பிழைகளை குறைக்கிறது. தரவு உள்ளீடு துல்லியமாக இருப்பதை உறுதி செய்கிறது. ஏனெனில் வழக்கு விவரங்கள் நீதிமன்ற தகவல் அமைப்புடன் தானாக ஒருங்கிணைக்கப்படும்.
பயனர்கள் தங்கள் வழக்குகளின் நிலையினை ஒரு பிரத்யேக 'டாஷ் போர்டு' வாயிலாக கண்காணிக்கலாம். வழக்கு ஆவணங்களை எங்கிருந்தும் எளிதாக அணுக முடியும். காகிதபயன்பாட்டை குறைப்பதன் வாயிலாக மின்னணு வழக்கு தாக்கல் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உதவுகிறது.
மின்னணு வழக்கு தாக்கல் ஆவணங்களுக்கு பாதுகாப்பான சேமிப்பக இடத்தை வழங்குகிறது. காகித ஆவணங்களை போல தொலைந்து விடவோ அல்லது சேதமடையவோ வாய்ப்பில்லை. அனைத்து நடவடிக்கைகளில் டிஜிட்டல் தணிக்கை தடயங்கள் இருப்பதால் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கிறது.

