/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பால் உற்பத்தியாளர் சங்கத்துக்கு கோபால ரத்னா விருது
/
பால் உற்பத்தியாளர் சங்கத்துக்கு கோபால ரத்னா விருது
பால் உற்பத்தியாளர் சங்கத்துக்கு கோபால ரத்னா விருது
பால் உற்பத்தியாளர் சங்கத்துக்கு கோபால ரத்னா விருது
ADDED : நவ 26, 2025 05:39 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, குன்னங்காட்டுப்பதி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்துக்கு கோபால ரத்னா விருது வழங்கப்பட்டது.
கேரளா மாநிலம், குன்னங்காட்டுப்பதி பால் உற்பத்தியாளர் சங்கம் கடந்த, 1993ம் ஆண்டு 68 லிட்டர் பால் கொள்முதலுடன் துவங்கப்பட்டது. கொழிஞ்சாம்பாறை ஊராட்சியில் உள்ள இரண்டு வார்டுகளில் இருந்து மட்டுமே பால் பெறப்படுகிறது. சங்கத்தில், ஆறு நிரந்தர பணியாளர்கள் உள்ளனர்.
கடந்த, 15 ஆண்டுகளாக, ஆடிட்டிங்கில், 'ஏ' கிளாஸ் வகுப்பில் உள்ளது. இந்த பால் உற்பத்தியாளர் சங்கம் அதிக பால் கொள்முதல் செய்வதற்கான விருது பெற்றுள்ளது. கடந்த, 2022 - 25 வரையான ஆகிய மூன்று ஆண்டுகளில் பாலக்காடு மாவட்டத்திலேயே அதிக பால் கொள்முதலுக்கு விருது பெற்றது.
கடந்த, 2023 - 24ம் ஆண்டு மில்மா பொருட்கள் அதிகமாக விற்பனை செய்ததற்கு மாவட்ட அளவிலும், நடப்பாண்டு வர்கீஸ் குரியன் விருதும் பெற்றது. தற்போது, 24 - 25ம் ஆண்டுக்கான இந்தியாவின் தலைசிறந்த விருதான கோபால ரத்னா விருது கிடைத்துள்ளது. இதற்கு சங்க தலைவர் ஆனந்த், போர்டு உறுப்பினர்கள், செயலாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர், 'விருது பெற உறுதுணையாக இருந்த விவசாயிகளுக்கு சமர்பிக்கிறோம்,' என்றனர்.

