/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெங்களூரு குண்டுவெடிப்பு கைதிகள் கோர்ட்டில் ஆஜர்
/
பெங்களூரு குண்டுவெடிப்பு கைதிகள் கோர்ட்டில் ஆஜர்
ADDED : ஜூலை 23, 2025 10:03 PM

கோவை; கோவை, கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் இதயத்துல்லா; தொழிலதிபரான இவரை, பணத்திற்காக கும்பல் கடத்த திட்டமிட்டுள்ளதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
விசாரணையில், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் பா.ஜ.,அலுவலகம் அருகில் 2013., ஏப்., 17ல் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கோவை, உக்கடம், கரும்புக்கடை பகுதியை சேர்ந்த கிச்சான்புகாரி, அஸ்ரப் அலி, ஜுல்பிகர் அலி ஆகியோருக்கு, தொடர்பு இருப்பதும், பெங்களூரு சிறையிலிருந்தபடி, 2019ல் சதி திட்டத்தில் ஈடுபட்டதும் தெரிந்தது. இந்த வழக்கு தொடர்பாக, மூவரை சேர்த்து, 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது, கோவை ஜே.எம்:5, கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிச்சான்புகாரி, அஸ்ரப் அலி, ஜுல்பிகர் அலி ஆகியோர், பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஜாமினில் வெளியே இருப்பவர்களும் ஆஜராகினர். அடுத்த கட்ட விசாரணையை, ஆக., 7க்கு ஒத்திவைத்து, மாஜிஸ்திரேட் வெர்ஜின் வெர்ஸ்டா உத்தரவிட்டார்.