தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேசிய 'ஸ்கேட்டிங்' போட்டியில் பெர்க்ஸ் மாணவர்கள் அசத்தல்

தேசிய 'ஸ்கேட்டிங்' போட்டியில் பெர்க்ஸ் மாணவர்கள் அசத்தல்

தேசிய 'ஸ்கேட்டிங்' போட்டியில் பெர்க்ஸ் மாணவர்கள் அசத்தல்


ADDED : ஏப் 14, 2025 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2025 04:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை : சென்னையில் நடந்த தேசிய 'ஸ்கேட்டிங்' போட்டியில், பெர்க்ஸ் பப்ளிக் பள்ளி மாணவ, மாணவியர் பதக்கங்கள் குவித்துள்ளனர்.

சென்னையில் தேசிய அளவிலான 'ஸ்கேட்டிங்' போட்டி நடந்தது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, குஜராத், புதுச்சேரி, ஹரியானா மாநிலங்களை சேர்ந்த, ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில், கோவை பெர்க்ஸ் பப்ளிக் பள்ளி(சி.பி.எஸ்.இ.,) மாணவி யாழிசை, ஒரு தங்கம் மற்றும் வெண்கல பதக்கமும், ரிலேவில் வெள்ளிப் பதக்கம், ஹர்ஷதேவ் ஒரு வெள்ளி, ஒரு வெண்கல பதக்கமும், ரிலேவில் தங்கப் பதக்கமும் வென்றனர்.

மாணவர் விசாகன் இரண்டு வெண்கல பதக்கமும், ரிலேவில் வெள்ளிப் பதக்கமும், கவுரவ் சித்தார்த் ரிலேவில் தங்கப் பதக்கமும், ஆதிரா இரண்டு வெண்கல பதக்கமும், ரிலேவில் வெள்ளிப் பதக்கம், அத்விக் ரிலேவில் தங்கப்பதக்கமும் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us