ADDED : ஜன 16, 2025 03:57 AM
கோவை : ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு இடையேயான பஜனை போட்டி, வரும் 18ல் நடக்கிறது.
இது குறித்து, ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தான தலைவர் நாகசுப்ரமணியம், செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் கூறியதாவது:
பள்ளி மாணவர்களிடையே, ஆன்மிக உணர்வை மேன்மைப்படுத்தும் நோக்கிலும், ஞாபகத்திறன் அதிகரிப்பதற்காகவும், ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்திலுள்ள, ஸ்ரீமத் அபிநவ வித்யா தீர்த்த பிரவச்சன மண்டபத்தில் நடக்கிறது.
வரும் 18 ( சனிக்கிழமை) காலை 8:30 மணிக்கு துவங்கி, மாலை 6:30 மணி வரை நடக்கிறது. இதில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
இதில், பாரதிய வித்யா பவன் பப்ளிக் பள்ளி, ஸ்ரீ சவுடேஸ்வரி வித்யாலயா, பாரதிய வித்யாபவன் மெட்ரிக் பள்ளி, சபர்பன் மெட்ரிக், பாரதிய வித்யாபவன் அஜ்ஜனுார், சுகுணா இன்டர்நேஷனல், ஜி.ஆர்.டி., வித்யாவிகாசினி, சுதந்திரா பள்ளி, மகரிஷி வித்யாமந்திர், அமிர்த வித்யாலயா, பி.எஸ்.பி.பி.,மில்லினியம், சின்மயா வித்யாலயா ஆகிய பள்ளிகளை சேர்ந்த, மாணவ மாணவியர் பங்கேற்கின்றனர்.
அன்றைய தினம் மாலை 6:30 மணிக்கு, கம்பரின் ராமாயணம் குறித்து, ஆன்மிக சொற்பொழிவாளர் ஸ்ரீ கிருஷ்ணஜெகன்நாதன் பேசுகிறார். பக்தர்கள் பங்கேற்கலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

