UPDATED : மே 01, 2026 06:04 PM
ADDED : மே 01, 2026 05:52 PM

மேட்டுப்பாளையம்: சிறுமுகை ராஜ கணபதி கோவில் கும்பாபிஷேக விழாவில், பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
சிறுமுகை வ.உ.சி., நகரில், உள்ள ராஜகணபதி கோவிலில், கும்பாபிஷேகம் நடந்தது. இவ்விழாவில் மூன்று கலைநிகழ்ச்சிகள் நடந்தன. முதல் நாள் விஷ்ணு நாட்டியாலயா குழுவினரின், பரத நாட்டியம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மோத்தேபாளையம் திருமப்ப கவுடர் கிராமிய வள்ளி கும்மி கலைக் குழுவினரின், வள்ளி கும்மி நடந்தது. இதில் சிறுமியர் உள்பட ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
மூன்றாவது நிகழ்ச்சியாக கிருஷ்ணா நாட்டியாலயா குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் திரளான பொது மக்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ராஜ கணபதி கோவில் கவுரவத் தலைவர் ராஜேந்திரன், தலைவர் ராமசாமி, செயலாளர் நாச்சிமுத்து, பொருளாளர் சுப்பையன் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.
