/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு கல்லூரியில் பரதநாட்டிய பயிற்சி
/
அரசு கல்லூரியில் பரதநாட்டிய பயிற்சி
ADDED : அக் 04, 2024 11:29 PM
தொண்டாமுத்தூர் : தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், பரதநாட்டிய பயிற்சி வகுப்பு துவங்கியது.
தமிழ்நாடு அரசு கலை மற்றும் பண்பாட்டு துறை சார்பில், அரசு கல்லூரிகளில் மாணவர்களிடையே கலைத்திறமைகளை வளர்க்கும் நோக்கில், பகுதி நேர கலை பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து, தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், பரதநாட்டிய ஆசிரியர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், பரதநாட்டிய பயிற்சி வகுப்பு கல்லூரி அரங்கத்தில் நடந்தது.
இதன் துவக்க விழாவில், கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை வகித்தார். 20க்கும் மேற்பட்ட மாணவிகள், இப்பயிற்சியில் கலந்து கொண்டனர்.
முதல் நாள் வகுப்பில், குரு வணக்கம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.