/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சங்கரா கல்லுாரியில் பாரதி விழா சிறப்பு
/
சங்கரா கல்லுாரியில் பாரதி விழா சிறப்பு
ADDED : டிச 12, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; சரவணம்பட்டி, சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியின் தமிழ்த்துறை சார்பில், பாரதி விழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரியின் முதல்வர் ராதிகா, துணை முதல்வர் பெர்னார்ட் எட்வர்ட், தேர்வு கட்டுப்பாடு அதிகாரி பூபதி, தமிழ்த்துறைத் தலைவர் சதீஷ் மோகன் மற்றும் பிற துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்களும் பாரதியாரின் உருவப்படத்திற்கு, மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
மாணவர்கள், பாரதியாரின் பாடல்களை பாடி, பாரதியார் குறித்து உரையாற்றினர். தொடர்ந்து மாணவர்களின் கவியரங்கம் நடைபெற்றது.
சிறப்பாக கவிதைகளை எழுதி, கவியரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.