/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதியார் பல்கலை ஆணழகன் போட்டி; இந்துஸ்தான் கல்லுாரிக்கு சாம்பியன்ஷிப்
/
பாரதியார் பல்கலை ஆணழகன் போட்டி; இந்துஸ்தான் கல்லுாரிக்கு சாம்பியன்ஷிப்
பாரதியார் பல்கலை ஆணழகன் போட்டி; இந்துஸ்தான் கல்லுாரிக்கு சாம்பியன்ஷிப்
பாரதியார் பல்கலை ஆணழகன் போட்டி; இந்துஸ்தான் கல்லுாரிக்கு சாம்பியன்ஷிப்
ADDED : பிப் 05, 2025 12:48 AM

கோவை: பாரதியார் பல்கலை அளவிலான ஆணழகன் போட்டி, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது.
இதில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் உள்ள கலை அறிவியல் கல்லுாரிகளை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள், 60 முதல், 90 கிலோ மற்றும், 90 கிலோவுக்கும் அதிகமான எடை பிரிவுகளில் பங்கேற்றனர்.
இதில், 60 கிலோ எடை பிரிவில் கார்த்திகேயன், வாசிம் ஜாகிர், யேசுவராஜா ஆகியோரும், 65 கிலோ பிரிவில் பிரவீன்ராஜ், கார்த்திகேயன், மதன்குமார், 70 கிலோ பிரிவில் ரோகித், சக்திவான், சாகுல்ஹமீது, 75 கிலோ பிரிவில் சிவப்பிரியன், தர்னீஸ், கவுதம், 80 கிலோ பிரிவில் யுவன்ஸ்ரீ, அசோக், அபிஷேக் ஆகியோரும், முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
அதேபோல், 85 கிலோ பிரிவில் மகேஸ்வரபாண்டியன், பரத் ஆகியோர் முதல் இரு இடங்களையும், 90 கிலோ பிரிவில் ரிபாஸ், 90 கிலோவுக்கும் மேற்பட்ட பிரிவில் சரவணன் ஆகியோரும் பரிசுகளை வென்றனர். 2024-25ம் ஆண்டுக்கான மிஸ்டர் பாரதியார் யுனிவர்சிட்டி பட்டத்தை, ஈரோடு வி.இ.டி., கல்லுாரி வென்றது.
ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி தட்டியது. சாம்பியன்ஷிப் வென்றவர்களை, கல்லுாரி செயலாளர் சரஸ்வதி பாராட்டினார். வெற்றி பெற்றவர்களுக்கு, பாரதியார் பல்கலை உடற்கல்வி இயக்குனர்(பொ) ராஜேஷ்வரன் பரிசுகள் வழங்கினார்.