/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதியார் பல்கலை கிரிக்கெட் வி.எல்.பி., கல்லுாரி அபாரம்
/
பாரதியார் பல்கலை கிரிக்கெட் வி.எல்.பி., கல்லுாரி அபாரம்
பாரதியார் பல்கலை கிரிக்கெட் வி.எல்.பி., கல்லுாரி அபாரம்
பாரதியார் பல்கலை கிரிக்கெட் வி.எல்.பி., கல்லுாரி அபாரம்
ADDED : டிச 06, 2024 05:18 AM
கோவை : பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் வி.எல்.பி., கல்லுாரி அணி முதலிடம் பிடித்தது.
பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான(சி-மண்டலம்) கிரிக்கெட் போட்டிகள், ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது. போட்டியில் பங்கேற்க, 21 அணிகள் பதிவு செய்திருந்த நிலையில், 17 அணிகள் விளையாடின.
இறுதிப்போட்டியில், வி.எல்.பி., ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லுாரியும், என்.ஜி.எம்., பொள்ளாச்சி அணியும் விளையாடின. முதலில் பேட்டிங் செய்த வி.எல்.பி., அணி, 20 ஓவரில், 8 விக்கெட் இழப்புக்கு, 140 ரன்கள் எடுத்தது.
அடுத்து பேட்டிங் செய்த என்.ஜி.எம்., அணி, 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு, 131 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டாம் இடம் பிடித்தது. மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில், கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியும், எஸ்.டி.சி., பொள்ளாச்சி அணிகளும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த கிருஷ்ணா கல்லுாரி அணியினர், 15.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 59 ரன்கள் எடுத்தது.
60 ரன் இலக்குடன் களம் இறங்கிய எஸ்.டி.சி., அணியினர், 6.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு, 60 ரன்கள் எடுத்து மூன்றாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு, கிருஷ்ணா ஆதித்யா கல்லுாரி முதல்வர் பழனியம்மாள் பரிசுகள் வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.