/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உதவித்தொகையுடன் ஆராய்ச்சிபாரதியார் பல்கலை அழைப்பு
/
உதவித்தொகையுடன் ஆராய்ச்சிபாரதியார் பல்கலை அழைப்பு
ADDED : நவ 17, 2024 10:27 PM
கோவை; உதவித்தொகையுடன் ஒன்றரை ஆண்டுகள் ஆராய்ச்சி மேற்கொள்ள தகுதியான நபர்கள் விண்ணப்பிக்க பாரதியார் பல்கலை அறிவுறுத்தியுள்ளது.பாரதியார் பல்கலையின் சுற்றுச்சூழல் துறையில், ஆராய்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ், அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் ஆராய்ச்சி கழகத்தின் சார்பில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த சிறப்பு திட்டத்தில் பணிபுரிய உதவி ஆய்வாளர் மற்றும் கள உதவியாளராக பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்க பாரதியார் பல்கலை அழைப்பு விடுத்துள்ளது. ஒன்றரை ஆண்டுகள் வரை ஆராய்ச்சி நடக்க உள்ளது. முதுநிலை அறிவியல் சுற்றுசூழல் துறை அறிவியல் அல்லது ஏதாவது ஒரு முதுநிலை அறிவியல் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
கள உதவியாளர் பணியிடத்துக்கு சுற்றுசூழல் அறிவியல் அல்லது ஏதாவது ஒரு அறிவியல் பாடப்பிரிவில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆர்வமுடைய மாணவர்கள், வரும், 28ம் தேதிக்குள் அவர்களது சுயவிபர பட்டியலை, arulpragasan@buc.edu.in என்ற இமெயிலுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.