/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறப்பு செய்முறை வகுப்புகளில் பங்கேற்க வாய்ப்பளித்து பாரதியார் பல்கலை அழைப்பு

ADDED : ஜன 07, 2025 07:13 AM
கோவை; செய்முறை வகுப்புகளில் பங்கேற்காத, தொலை நிலை கல்வி இயக்க மாணவர்கள், சிறப்பு வகுப்புகளில் பங்கேற்க, பாரதியார் பல்கலை இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது.
பாரதியார் பல்கலையின் தொலைநிலைக்கல்வி இயக்கத்தின் சார்பில், பல்வேறு பகுதிகளிலும், சிறப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் வாயிலாக பல்வேறு பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இவற்றில், செய்முறை வகுப்புகளை உள்ளடக்கிய கல்வியும் பயிற்றுவிக்கப்படுகிறது. மாணவர்கள் செய்முறை தேர்வுகளில் பங்கேற்பது அவசியம்.
இருப்பினும் பல்வேறு காரணங்களால், பல மாணவர்கள் செய்முறை தேர்வுகளில் பங்கேற்காமல்
தவிர்த்துள்ளனர். இவர்களுக்கு இறுதி வாய்ப்பை பாரதியார் பல்கலை வழங்கிஉள்ளது.
இதன்படி, 2007 - 08 முதல், 2021 - 22 வரையிலான காலகட்டத்தில் பயின்ற மாணவர்கள், செய்முறை வகுப்புகளில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான கோரிக்கை கடிதத்தை, 'இயக்குனர், தொலைநிலைக்கல்வி இயக்கம், பாரதியார் பல்கலை, கோவை-641046' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அல்லது, aca.sde.bu@gmail.com என்ற இ-மெயிலுக்கு வரும், 13ம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.
பயிற்சி கட்டணம் செலுத்தாத மாணவர்களும், உடனடியாக செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.